காளஹஸ்தி சிவன் கோயில் நித்திய அன்னதான திட்டத்திற்கு நன்கொடை
ADDED :1278 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நடக்கும் நித்திய அன்னதான திட்டத்திற்காக ஸ்ரீ காளஹஸ்தி நகரைச் சேர்ந்த மறைந்த. பிரபாகர் ராவின் நினைவாக அவரது பெயரில் அவரது மனைவி சுபாஷினி மற்றும் மகன்கள் விக்ரம் ராவ் மற்றும் கௌதம் ராவ் அவர்கள் ரூபாய் ஒரு லட்சத்து ஒரு ரூபாயை தேவஸ்தானத்திற்கு அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு. தாரக சீனிவாசுலுவிடம் வழங்கினர். முன்னதாக இவர்களுக்கு கோயில் சார்பில் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர் . கோயிலில் ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினார்.