உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடற்கரையில் மேலும் 2 சுவாமி விக்கிரகங்கள் கண்டெடுப்பு

கடற்கரையில் மேலும் 2 சுவாமி விக்கிரகங்கள் கண்டெடுப்பு

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கடற்கரையில் ஏற்கனவே 4 சுவாமி விக்ரகங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 கருங்கல்லால் ஆன சுவாமி விவேகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொடியம்பாளையம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருங்கல்லால் ஆன 4 சுவாமி விக்கிரகங்கள் கடற்கரையில் கிடந்தன. தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் மற்றும் புதுப்பட்டிணம் போலீசார் கொடியம்பாளையம் கடற்கரைக்கு சென்று சுவாமி விக்ரகங்களை கைப்பற்றி தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து வந்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்த சுவாமி விக்ரகங்கள் கொடியம்பாளையம் கடற்கரைக்கு எப்படி வந்தது என்பது குறித்து தாசில்தார் விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று கடற்கரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கடலில் குளித்த போது மேலும் 2 அம்பாள் விக்ரகங்களை கண்டடுத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி வருவாய்த்துறையினர் கொடியம்பாளையம் கிராமத்திற்கு சென்று புதுப்பட்டினம் போலீசார் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் சுவாமி விக்ரகங்களை கைப்பற்றி தாலுகா அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து கொடியம்பாளையம் கடற்கரையில் சுவாமி விக்ரகங்கள் கிடைப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !