நவசக்தி வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜை
ADDED :1267 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாரதி நகர் அருகே உள்ள நவசக்தி வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று பஞ்சமி திதி நாளில் நவசக்தி வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், அலங்காரங்கள் நடந்தன. சிறப்பு மலர், காய், கனி அலங்காரத்தில் நவசக்தி வாராஹி அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.