மேலும் செய்திகள்
ஸ்ரீ வழிகாட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
881 days ago
அன்னூர் பெரிய அம்மன் கோவிலில் பவுர்ணமி வழிபாடு
881 days ago
அழகு வள்ளியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் துவக்கம்
881 days ago
நாகப்பட்டினம்: நாகை அடுத்த கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவில் பங்குனி விழாவை முன்னிட்டு நடந்த தீமிதித்தல் நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.நாகை அடுத்த கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு விழா கடந்த 4 ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நாள்தோறும் அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் முளைப்பாரி மற்றும் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.தொடர்ந்து நேற்று மாலை கோவில் முன் பக்தர்கள பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
881 days ago
881 days ago
881 days ago