உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் துவங்கி நடந்து வருகிறது. இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, கம்பம் நடுதல் நடந்தது. வி.பி தெரு சந்தான வேணுகோபால் கோவிலில் இருந்து சீர்தட்டு ஊர்வலம் புறப்பட்டு, கோவிலை அடைந்தது. இதில், குலுக்கலில் பெயர் விழுந்த, நாகேஸ்வரி என்ற சிறுமி சீர் தட்டு ஊர்வலம் எடுத்து வந்தார். மதியம் 3:00 மணியளவில் அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து அக்னிசட்டி ஊர்வலம், அம்மன் வேப்பமர வாகனத்தில் கரக திருவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை சகோதரர்கள் சங்கத்தினர், சிகப்பு ரோஜா நற்பணி மன்றத்தினர், பக்தர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !