முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED :995 days ago
முக்கூடல்: முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இந்து நாடார் முதாயம் சார்பில் நடந்த திருவிளக்கு பூஜையை மணிமேகலை சிவபத்மநாதன் திருவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தனலட்சுமி பொன்னரசு மற்றும் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு விநாயகர் சிலை பரிசாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாடார் முதாய தலைவர் பொன்னரசு, ஹரிராம்சேட் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.