பழநி கிரிவீதியில் நிழற்பந்தல் அமைக்கும் பணி
ADDED :996 days ago
பழநி: பழநி, மலைக்கோயில் செல்லும் வழியில் கிரிவீதியில் நிழல் பந்தல்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பழநி வரும் பக்தர்கள் குடமுழுக்கு மண்டபம் வழியே படிப்பாதை, யானை பாதையை அடைந்து மலைக்கோயில் செல்கின்றனர். தற்போது பாத விநாயகர் கோயிலில் இருந்து குடமுழுக்கு மண்டபம் வரை பக்தர்கள் வரும் கிரிவீதியில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கிரிவீதியில் வெப்பம் தாங்காமல் ஓடி வருகின்றனர். இதுகுறித்து கடந்த ஏப்.10., அன்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை அடுத்து, வடக்கு கிரிவீதி பகுதியில் கோயில் நிர்வாகம் சார்பில் நிழல் பந்தல்களை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.