உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்து கோயில்களை இடிப்பதை கைவிட வேண்டும்: இந்து முன்னணி

இந்து கோயில்களை இடிப்பதை கைவிட வேண்டும்: இந்து முன்னணி

கூடலூர்: ’தமிழக அரசு இந்து கோயில்கள் இடிப்பதை கைவிட வேண்டும்’ என, இத்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.

கூடலூரில், இந்து முன்னணி மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று, நடந்தது. கூட்டத்துக் மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கிஷோர்குமார் பங்கேற்று பேசினார். கூட்டத்தில், ’இந்து கோவில் நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை கைவிட வேண்டும்; போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க, விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில செயலாளர் கிஷோர் குமார் கூறுகையில், ’ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை சீர்குலைக்கும் வகையில், அரசு இடையூறு செய்வதை தவிர்க்க வேண்டும். அனுமதி இல்லாமல், சிலர் வழிபாடு (ஜெபம்) கூடம் நடத்தி, மதமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும். கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு போதை பொருட்கள், ஹவாலா பணம் கடத்துவதை தடுப்பதுடன், அதில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். கூட்டத்தில், மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, பொதுச் செயலாளர் கார்த்தி, நகரத் தலைவர் குருசாமி ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !