உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூரில் ஏப்.14ல் ஜெயந்தன் பூஜை

திருப்புத்தூரில் ஏப்.14ல் ஜெயந்தன் பூஜை

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் பைரவர் சன்னதியில் ஏப்.14 ல் ஜெயந்தன் பூஜை விழா கொண்டாடப்படுகிறது.

குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் யோகநிலையில் அமர்ந்தபடியே யோகபைரவர் அருள்பாலிக்கிறார். பல நூற்றாண்டுகளாக இங்கு பைரவருக்கு ஜெயந்தன்  பூஜை விழா நடக்கிறது. முன்னர் இந்திரன் மகன் ஜெயந்தன் முனிவரால் சாபம் பெற்றார். இதனால் ஜெயந்தன் பைரவர் சன்னதியில் தவமிருந்து சுவாமியின் அருளால் பாவ விமோசனம் அடைந்தார். இதனையடுத்து  ‛ஜெயந்தன் பூஜை’  என்ற பெயரில் மக்களால் பைரவருக்கு விழா எடுக்கப்படுகிறது. மாவிளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றுவர். இந்த ஆண்டு ஏப்.14 ல் ஜெயந்தன் பூஜை நடைபெறும். காலை 9:00 மணிக்கு யாகசலை பூஜைகள் துவங்குகின்றன.தொடர்ந்து காலை 10:00 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும்.பின்னர் அபிேஷக, ஆராதனைகள் நடந்து மூலவர் பைரவர் வெள்ளி கவசத்தில் அருள்பாலிப்பார். இரவில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

பால்குட விழா:  தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஏப்.14ல் கோட்டைக் கருப்பர் கோயிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து திருத்தளிநாதர் கோயில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனைகள் காலை 7:40 மணிக்கு நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !