காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து
ADDED :1027 days ago
காஞ்சிபுரம் : தர்மத்தை விட்டு கொடுக்க கூடாது, நல்ல விஷயங்களை செய்ய வேண்டும், பக்தியையும், தன்னலம் கருதாத, பிறர் நலம் காணக்கூடிய சங்கல்பம், செய்ய வேண்டும் என காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தமிழ்ப் புத்தாண்டு ஆசி வழங்கியுள்ளார்.
காஞ்சி காமகோடி வாணி: காஞ்சி சங்கர மடம் காமகோடி, பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சார்பில், பக்தர்களுக்கு மாதந்தோறும் கடிதம், சங்கர மடத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். கடந்த, மார்ச் மாதத்துக்கான கடிதம், ‛காமகோடி வாணி என்ற பெயரில், தெலுங்கு மொழியில், https://kamakoti.org/telugu/newsletter/kamakoti-vani-Mar-2023.html என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.