மேட்டுப்பாளையத்தில் ஐயப்ப பக்தர்களின் திருவிளக்கு ஊர்வலம்
ADDED :188 days ago
மேட்டுப்பாளையம்: அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில், மேட்டுப்பாளையத்தில் திருவிளக்கு ஊர்வலம் நடந்தது.
மேட்டுப்பாளையம் காட்டூரில், அனைத்து அய்யப்ப பக்தர்கள் சங்கம் சார்பில், காட்டூர் ஐயப்பன் கோவிலில், பங்குனி உத்திர நட்சத்திர பூஜை நடந்தது. பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு, ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு யாக வேள்விகள், வழிபாடுகள் நடந்தன. மாலை 7:00 மணிக்கு மேட்டுப்பாளையம் கோ- ஆப்ரேட்டிவ் காலனி உள்ள கணபதி கோவிலில் இருந்து, திருவிளக்கு ஐயப்ப சுவாமி ஊர்வலம் நடந்தது. 700க்கு மேற்பட்ட பெண்கள், கையில் திருவிளக்கு ஏந்தி, ஐயப்பன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். காரமடை சாலை, பஸ் ஸ்டாண்ட், ஊட்டி சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, காட்டூர் வழியாக ஊர்வலம், ஐயப்பன் கோவிலை அடைந்தது. ஐயப்பன் பாடல்களை பக்தர்கள் பாடி சென்றனர்.