உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா : தங்க ஹம்ஸ வாகனத்தில் நம்பெருமாள் உலா

ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா : தங்க ஹம்ஸ வாகனத்தில் நம்பெருமாள் உலா

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர் திருவிழாவின் ஆறாம் நாளான இன்று காலை உற்சவர் நம்பெருமாள் காலை தங்க ஹம்ஸ வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகள் வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நம்பெருமாள் இன்று பகல் நாகப்பிள்ளை ஆஸ்தான மண்டபம் செல்லவில்லை. திருக்கோவில் ரெங்கவிலாச மண்டபத்தில் சேவை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !