உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானானந்தா நிகேதன், ஸ்ரீ நித்யானந்தகிரி சுவாமிகள் சித்தி அடைந்தார்

ஞானானந்தா நிகேதன், ஸ்ரீ நித்யானந்தகிரி சுவாமிகள் சித்தி அடைந்தார்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஸ்ரீ ஞானானந்தா நிகேதன் நிர்வாக அறங்காவலர் சுவாமி ஸ்ரீ நித்தியானந்தகிரி சுவாமிகள் சித்தி அடைந்தார்.

திருக்கோவிலூர், தபோவனத்தில் உள்ள ஞானானந்தா நிகேதனின் நிர்வாக அறங்காவலரான ஸ்ரீ நித்தியானந்தகிரி சுவாமிகள், வேதத்தின் சிறப்புகள், அதன் பயன் குறித்து, இந்தியா மட்டுமல்லாது ஜெர்மன் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு கருத்துக்களை எளிய வழியில் எடுத்துக் கூறியவர். ஆன்மீக அன்பர்களால் போற்றப்பட்ட நித்தியானந்தகிரி சுவாமிகள் நேற்று மாலை 3:30 மணிக்கு வயது முதிர்வு காரணமாக சித்தி அடைந்தார். அவரது பூதஉடல் இரவு 7:30 மணி அளவில் நிகேதன், பிருந்தாவனவளாகத்தில் ஆன்மீக அன்பர்களால் சமாதி நல்லடக்கம் செய்யப்பட்டார். இந்நிகழ்வில் அறங்காவலர்கள் சுவாமி பிரபாவனந்த சரஸ்வதி, சுவாமி ராமானந்தகிரி, சிவப்பிரகாசநந்தா மற்றும் அறங்காவல் குழுவினர் அவரது பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !