யோக நாச்சியார் ஆலய ஜெயந்தி விழா
ADDED :981 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே யோகா நாச்சியார் ஆலய ஜெயந்தி விழாவை முன்னிட்டு, விரதமிருந்த பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். முன்னதாக மூலவர் அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.