ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா : வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள் உலா
ADDED :913 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று மாலை உற்சவர் நம்பெருமாள் வெள்ளி யானை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகள் வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.