வீரபாண்டி மாரியம்மன் கோவில் திடலில் திருவிளக்கு பூஜை
ADDED :915 days ago
பெ.நா.பாளையம்: வீரபாண்டி மற்றும் கூடலூர் கவுண்டம்பாளையம் நகர் இந்து முன்னணி சார்பில், இரண்டாம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டி மாரியம்மன் கோவில் திடலில் விநாயகர் மற்றும் மகாலட்சுமி சிலைகள் பிரதிஷ்டை செய்து, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. விழாவையொட்டி, கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை ஆகியன நடந்தன. முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. மாலை, 1,508 திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு நாயக்கன்பாளையம் சீரடி சாய்பாபா சன்ஸ்தான் சார்பில், அன்னதானம் நடந்தது. இரவு வாணவேடிக்கையுடன் விழா நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.