திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா; பக்தர்கள் பால்குடம் ஊர்வலம்
ADDED :983 days ago
சிறுபாக்கம்: மங்களூரில் திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவையொட்டி பால்குடம் ஊர்வலம் நடந்தது. மங்களூர் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதம் தீமிதி திருவிழா நடக்கும். நடப்பாண்டில் தீமிதி திருவிழா துவங்கியதையொட்டி, நேற்று பால் குடம் ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் செவ்வாடை அணிந்து, அலகு குத்தியும், பால் குடங்கள் ஏந்தியும், ஊர்வலமாக சென்று அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர். பின்னர், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.