உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொடர் விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

தொடர் விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

ராமேஸ்வரம்: தொடர் விடுமுறையாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

ஏப்., 14 முதல் 16 வரை தொடர் விடுமுறையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுமுறை விட்டனர். இதனால் கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 3ம் நாளான நேற்று ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் முதலில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டிய கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்பணம் பூஜை செய்து புனித நீராடினார்கள். இதனையடுத்து கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் பக்தர்கள் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !