உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருமுறை இன்னிசைக் கச்சேரி

வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருமுறை இன்னிசைக் கச்சேரி

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஐயாறப்பர் திருமுறை மன்றம் சார்பில் இன்னிசை கச்சேரி நடந்தது.

திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருவையாறு ஐயாறப்பர் திருமுறை மன்றம் சார்பில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மெய்யியல் துறை பேராசிரியர் நல்லசிவம் தலைமையில், திருமுறை இன்னிசை கச்சேரி நடந்தது. இரண்டு மணி நேரம் நடந்த இசைக் கச்சேரியில் சிவனடியார்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அனைவருக்கும் சால்வை அணிவித்து கவுரவிக்கப் பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !