தென்னம்பாக்கம் அழகு முத்து அய்யனார் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :985 days ago
கடலூர் அடுத்த தென்னம்பாக்கம் அழகு முத்து அய்யனார் கோயிலில் சித்திரை திருவிழாவை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கடலூர் அருகே உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அழகு முத்து அய்யனார் கோவில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை மாதம் முதல் திங்கட்கிழமை அன்று சித்திரை திருவிழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம், மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.