உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

வீரட்டானேஸ்வரர் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் துர்க்கை அம்மனுக்கு ராகுகால சிறப்பு பூஜை நடந்தது.

திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாத சிவராத்திரி மற்றும் செவ்வாய்க்கிழமை ராகு கால பூஜை இன்று மாலை 3:00 மணிக்கு நடந்தது. துர்க்கை அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !