உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் காப்புக்கட்டி சித்திரைத் திருவிழா துவங்கியது.

இக்கோயிலில்  10  நாட்கள் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. நேற்று தெற்குப்பட்டு மூலஸ்தான அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. இன்று காலை கொடி மரம் அருகே அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்மனுக்கும், கொடிப் படம், கொடிமரத்திற்கும் தண்டபாணி குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கொடியேற்றம் நடந்து அலங்கார தீபாரதனை நடந்தது. பின்னர் காப்புக் கட்டி விழா துவங்கியது. இரவில் பூதகி வாகனத்தில் அம்பாள் தீருவீதி வலம் வந்தார். தொடர்ந்து தினசரி இரவில் வாகனங்களில் அம்பாள் திருவீதி உலாவும், ஏப்.25ல்  தேரோட்டமும், மறுநாள் பால்குட விழாவும், ஏப்27 ல் காலையில்  தீர்த்தவாரியும் இரவில் பூப்பல்லக்கும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !