காரைக்காலில் மாரியம்மன் வீதியுலா நடந்தது
காரைக்கால் : காரைக்காலில் ஏழை மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் வீதியுலா நடைபெற்றது.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள கோவில்பத்து ஏழை மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.இதில் மாரியம்மனுக்கு பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பால்குடம் ஊர்வலம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் ஏழை மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா தொகுதி எம்.எல்.ஏ.. திருமுருகன் தலைமையில் நடைபெற்றது.இதில் காங் கட்சி மாவட்ட தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாரியம்மனை தரிசனம் மேற்கொண்டனர்.
முதற்கட்ட ஆய்வில் செப்பேடுகள் தலா 400 கிராம் எடையும் 68 சென்டிமீட்டர் நீளமும், ஏழு புள்ளி அஞ்சு சென்டிமீட்டர் அகலமும் உடையதாக உள்ளது கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் தேவாரப் பாடல்கள் செப்பேடுகளில் பதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இதுவரை செப்பேடுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை முதன் முறையாக இங்கு நான் இருக்கும் மேற்பட்ட தேவாரம் பதிக்கப்பட்ட செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது கண்டெடுக்கப்பட்டுள்ள செப்பேடுகளில் என்ன பதிகங்கள் உள்ளன புதிய தேவாரப் பதிகங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் என தெரிவித்தனர். ஆய்வின்போது சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், கோவில் கண்காணிப்பாளர் செந்தில் குமார் ரவி ரவிச்சந்திரன் மயிலாடுதுறை இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர்கள் பத்ரி நாராயணன் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்.