உத்தரகோசமங்கை சிவன் கோயில்களில் பிரதோஷ விழா
ADDED :1129 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. மூலவர் மங்களநாதர் மற்றும் கல் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரதோஷ பாடல்களை பாடினார். பூவேந்தியநாதர் சமேத பவளநிற வல்லியம்மன் கோயிலில் பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் ரிஷப வாகனத்தில் உள்பிரகார வீதி உலாவும் நடந்தது.