உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் சவுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா : கருட கொடி ஏற்றம்

சேலம் சவுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா : கருட கொடி ஏற்றம்

சேலம் : அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா துவங்கியது.

சேலம் அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு விழா நேற்று பட்டாச்சாரியார்கள் வேத மத்திரங்கள் முழங்க ‘கருட கொடி’ ஏற்றி துவக்கி வைத்தனர். கொடியேற்ற வைபவத்தில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !