ரங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம்
ADDED :1098 days ago
தேவகோட்டை: தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோவில் பிரமோத்ஸவம் திருவிழா கடந்த 10 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ரங்கநாத பெருமாள், ஸ்ரீ தேவி பூதேவி மற்றும் சிறப்பு திருமஞ்சனமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு சுவாமி சிறப்பு வாகனங்களில் உலா வந்தனர். நேற்று மாலை ரங்கநாத பெருமாள், ஸ்ரீ தேவி பூதேவி தேரில் வீற்றிருக்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு மகாலட்சுமி தாயாருக்கு ஒன்பது தினங்கள் லட்ச்சார்ச்சனை நடந்தன.