உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழா : காப்பு கட்டிய விரதம் துவங்கிய பக்தர்கள்

வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழா : காப்பு கட்டிய விரதம் துவங்கிய பக்தர்கள்

தேனி : வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டிய பக்தர்கள் விரதம் துவங்கினர்.

தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழா பிரபலமான திருவிழாக்களில் ஒன்றாகும். திருவிழாவிற்கு தேனி மாவட்டம் மட்டும் இன்றி மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து செல்வர். இங்கு சித்திரை திருவிழா திருகம்பம் நடுதல் நிகழ்வுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று காப்பு கட்டிய பக்தர்கள் விரதம் துவங்கினர். திருவிழாவை முன்னிட்டு திருக்கம்பத்தகற்கு புனித நீர் ஊற்றி ஏராளமான பெண்கள் வழிபட்டனர்.  மே 9ல் சுவாமி கோயில் வீட்டில் இருந்து கோயிலுக்கு பவனி வருதல், மே 10, 11 சுவாமி முத்துப்பல்லக்கு, புஷ்ப பல்லக்கில் புறப்பாடும், 12ல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வும், 16 ஊர் பொங்கல் நிகழ்வும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !