உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர்.

அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த 9 நாட்களாக நடந்து வருகிறது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று அதிகாலையில் பக்தர்கள் கோவிலுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள பூக் குழியில் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர். சுமார் 50 க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழியில் பரவசத்துடன் இறங்கினர். மாலையில் தேர் முக்கிய ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தது. பக்தர்கள் வடம் பிடித்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !