சூரிய கிரகணம் நேரத்தில் வெண்கல தட்டில் உலக்கை நின்றது
ADDED :904 days ago
மேட்டுப்பாளையம்: தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியாவில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அதே நேரத்தில் சிறுமுகை அருகே வெண்கல தட்டு தண்ணீரில், 4:30 மணி நேரம் உலக்கை நின்றது. இந்திய நேரப்படி காலை, 7:04 லிருந்து மதியம், 12:29 மணிவரை சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்த கிரகணம் தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலிய, அண்டார்டிகா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் கிரகணம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு வீராசாமி நகரில் ஜீவானந்தம் என்பவர், கிரகணம் தொடங்கிய போது, வாசலில் வெண்கல தட்டில் தண்ணீர் ஊற்றி, அதில் உலக்கையை நிறுத்தி வைத்தார். இந்த உலக்கை கீழே விழாமல் நின்றது. மதியம், 12:15 மணிக்கு உலக்கை கீழே சாய்ந்து விடுமோ என்ற அச்சத்தில், எடுத்து விட்டனர். நான்கரை மணி நேரம் உலக்கை நின்றதை, அப்பகுதி மக்கள் பார்த்து பரவசம் அடைந்தனர்.