உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோவில்களில் கிருத்திகை விழா

முருகன் கோவில்களில் கிருத்திகை விழா

அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில், கிருத்திகை விழா கொண்டாடப்பட்டது.சித்தர்கள் வழிபாடு செய்த, பழமையான சாலையூர், பழனிஆண்டவர் கோவிலில் இன்று மதியம் பழனி ஆண்டவருக்கு, பால், தயிர், நெய், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது… அலங்கார பூஜை நடந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவில், அன்னூர் மன்னெஸ்வரர் கோவிலில் முருகப்பெருமான் சன்னதி, குமாரபாளையம் வட்டமலை ஆண்டவர் கோவில் ஆகியவற்றில் நேற்று கிருத்திகையை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !