குருப்பெயர்ச்சி : கோவில்களில் லட்சார்ச்சனை, சிறப்பு யாகம் குவிந்த பக்தர்கள்
நவக்கிரகங்களில் பூரணசுப கிரகமான குருபகவான் கும்ப ராசியில் இருந்து இன்று (ஏப்.22,2023) இரவு 11:27 மணிக்கு மேஷ ராசிக்கு பெயர்ச்சியானார். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, திருவாரூர் ஆலங்குடி, தஞ்சாவூர் தென்குடித்திட்டை, மதுரை குருவித்துறை, சிவகங்கை பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில், திருச்சி உத்தமர் கோவில், சென்னை பாடி வலிதாயநாதர், திருவொற்றியூர், காஞ்சிபுரம் கோவிந்தவாடி, அகரம் குருகோயில், வேலுார் தக்கோலம், திருச்செந்துார் உள்ளிட்ட தலங்களிலும், சிவன் கோயில்களில் உள்ள தட்சிணாமூர்த்தி, நவக்கிரக சன்னதிகளிலும் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை, சிறப்பு யாகம், அபிேஷகம் நடைபெற்றது. இந்த பெயர்ச்சியால் மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீன ராசியினர் நன்மையடைவர். மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்ப ராசியினர் பரிகாரமாக குருபகவான், தட்சிணாமூர்த்தியை வழிபட்டனர்.