பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோவிலில் ரூ.87 லட்சத்தில் புதிய தேர் திருப்பணி
ADDED :948 days ago
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் புகழ்பெற்ற துர்க்கையம்மன் கோவிலான ஞானாம்பிகையம்மன் சமேத தேனுபுரிஸ்வரர் கோவிலில், 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய தேர் வடிவமைப்பதற்கான திருப்பணி இன்று துவங்கியது. இதை தி.மு.க.,ராஜய்சபா எம்.பி.,கல்யாணசுந்தரம் திருப்பணியை துவக்கி வைத்தார். இதில் கோவில் செயல் அலுவலர் ஆறுமுகம், ஸ்தபதி செம்பனார்கோவில் முருகன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இலுப்பை மரத்தினால் வடிவமைக்கப்படும் புதிய தேர், சுமார் 40 டன் எடையில், 19 அடி அகலத்திலும், மரத்தேர் மட்டும் 21 அடி உயரத்திலும், அலங்காரத்துடன் 48 அடி உயரத்தில் வடிவமைக்கப்படவுள்ளது. இந்த தேர் வரும் 2025ம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழாவின் போது தேரோட்டம் நடைபெற வாய்ப்புள்ளது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.