திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா
ADDED :948 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு நேற்று காலை மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இரவு 11.27 மணிக்கு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு, குருதட்சணாமூர்த்தி மற்றும் நவகிரக குருபகவானுக்கு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இன்று காலை சிறப்பு ஹோமங்கள், குரு தட்சணாமூர்த்தி மற்றும் நவகிரக குரு பகவானுக்கு சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது.