உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையிலிருந்து போச்சம்பள்ளிக்கு பயணித்த சிலைகளுக்கு துர்கா ஸ்டாலின் பூஜை

சென்னையிலிருந்து போச்சம்பள்ளிக்கு பயணித்த சிலைகளுக்கு துர்கா ஸ்டாலின் பூஜை

போச்சம்பள்ளி: சென்னையிலிருந்து போச்சம்பள்ளி கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட சிலைகளுக்கு, துர்கா ஸ்டாலின் பூஜை செய்து அனுப்பி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, ஜம்புகுட்டப்பட்டியில், அனந்தபெருமாள் கோவில் கட்டுமான பணி நடக்கிறது. சென்னை பெருமாள் ஸ்தபதி சிற்ப கூடத்திலிருந்து, ஸ்ரீதேவி, பூதேவி சுவாமி சிலைகளை, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, சிறப்பு பூஜை செய்து, சுவாமி சிலைகளை பெற்று, தொழிலதிபர் சஞ்சய்குமாரிடம் நேற்று காலை ஒப்படைத்தார். அங்கிருந்து, வேனில் கொண்டு வரப்பட்ட சிலைகள் மாலை, 5:00 மணிக்கு போச்சம்பள்ளி நான்கு சாலை சந்திப்பு வழியாக, ௧ கி.மீ., தொலைவில் ஜம்புகுட்டப்பட்டி அனந்தபெருமாள் கோவிலுக்கு மேள, தாளங்களுடன் கொண்டு வரப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !