காலகாலேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா : இன்றும் லட்சார்ச்சனை
ADDED :947 days ago
கோவில்பாளையம்: கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது.
கோவில்பாளையத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாடல் பெற்ற ஸ்தலமான காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு குருபெயர்ச்சி லட்சார்ச்சனை விழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று முன் தினம் இரவு 8:00 மணிக்கு சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. இரவு 11:26 மணிக்கு குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசித்தார். தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், கலசபிஷேகம், அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. கோவில்பாளையம், அன்னூர், கோவை பகுதியில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று காலை லட்சார்ச்சனை துவங்கி நேற்று இரவு வரை நடந்தது. இன்றும் காலை முதல் இரவு வரை லட்சார்ச்சனை நடக்கிறது. பக்தர்கள் லட்சார்ச்சனை விழாவில் பங்கேற்க திருக்கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.