உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரமால் கொண்ட ஐயனார் கோயிலுக்கு பக்தர்கள் புரவியெடுப்பு

கரமால் கொண்ட ஐயனார் கோயிலுக்கு பக்தர்கள் புரவியெடுப்பு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கோட்டைவேங்கைப்பட்டி, சூரம்பட்டி, பிரண்டிபட்டி கிராம மக்கள் சார்பில் கண்ணமங்கலப்பட்டியில் உள்ள கரமால் கொண்ட ஐயனார் கோயிலுக்கு புரவியெடுப்பு விழா நடத்தப்பட்டது.

மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் இக்கிராம மக்கள் சார்பில் ஒரு மாதத்திற்கு முன்பு பிடி மண் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் மூன்று கிராமத்திற்கும் தலா மூன்று அரண்மனை புரவிகளும், மூன்று நேர்த்திக்கடன் புரவிகளும் செய்யப்பட்டன. சிங்கம்புணரி வேளார் தெருவில் உள்ள புரவி பொட்டலில் நேற்று மாலை 3 கிராம மக்களும் இணைந்து புரவிகளுக்கு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து புரவிகளை சந்திவீரன் கூடம் வழியாக ஊர்வலமாக கோட்டைவேங்கைப்பட்டி கிராமத்திற்கு எடுத்துச்சென்றனர். அங்கு இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அங்கிருந்து கண்ணமங்கலம் கரையில் அமைந்துள்ள கரமால் கொண்ட அய்யனாருக்கு புரவிகள் எடுத்துச் செல்லப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !