உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானானந்தா நிகேதனில் அட்சய திருதியை அன்னதானம்

ஞானானந்தா நிகேதனில் அட்சய திருதியை அன்னதானம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த தபோவனம் ஸ்ரீ ஞானானந்தா நிகேதனில், அட்சய திருதியை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.

திருக்கோவிலூர் அடுத்த தபோவனம் ஸ்ரீ ஞானானந்தா நிகேதனில் அட்சய திருதியை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. சுவாமி நித்யானந்தகிரி சுவாமிகளின் ஆசியுடன், சுவாமி ப்ரபாவனந்த சரஸ்வதி, சுவாமி ராமானந்தகிரி தலைமை தாங்கி அன்னதானத்தை துவக்கி வைத்தனர். பொதுமக்கள் பலரும் அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகேதன் அறங்காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, பூபதி, பரமேஸ்வரன், அப்போல்லோ டாக்டர் திருமலை, கணேசன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !