அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :946 days ago
குள்ளஞ்சாவடி: வழுதலம்பட்டு அங்காளபரமேஸ்வரி கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. குள்ளஞ்சாவடி அடுத்த, வழுதலம்பட்டு, பருவராஜகுல வீதியில், ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்பிகை கோவில் அமைந்துள்ளது. கோவிலின் மகா கும்பாபிஷேக விழா, நேற்று காலை, நடைபெற்றது. கடந்த, 21ம் தேதி, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி, மகாலட்சுமி, சுதர்சன ஹோமங்களும், கோ பூஜை, சாகை வார்த்தல், ஸ்ரீ பிடாரி அழைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், யாகசாலை முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம், இரண்டாம் மற்றும், மூன்றாம் கால யாக பூஜைகள், இரவு மூன்றாம் கால மகா பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடந்தன. நேற்று காலை, 9:00 மணிக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு ஆலய கோபுர மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், வழுதலம்பட்டு கிராமவாசிகள் செய்திருந்தனர்.