உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமானுஜரின் 1006வது ஜெயந்தி உற்சவம் கோலாகலம்

ராமானுஜரின் 1006வது ஜெயந்தி உற்சவம் கோலாகலம்

அன்னூர் : ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி விழா அன்னூரில் நேற்று நடந்தது.

அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ஸ்ரீ ராமானுஜரின் 1006வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது. காலை 6:30 மணிக்கு விஸ்வக்சேனா ஆராதனை, கணபதி ஹோமம், திருமஞ்சனம் நடந்தது. இதையடுத்து ராமானுஜருக்கு, அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. உற்சவர் ராமானுஜர் கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். ராமானுஜர் குறித்த பாடல்கள் பாடப்பட்டன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !