உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ உற்ஸவம்: மே 4ல் தேரோட்டம்

திருப்புல்லாணி பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ உற்ஸவம்: மே 4ல் தேரோட்டம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயிலின் அருகே தனி சன்னதி கோயிலாக பட்டாபிஷேக ராமர் அமைந்துள்ளார். பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவம் (சித்திரை பெருவிழா) உற்சவ விழாவை முன்னிட்டு வருகிற ஏப்.26 அன்று காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் சன்னதி முன்புறமுள்ள கொடிமரத்தில் கொடி பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. தொடர்ந்து பத்து நாட்களும் சூரிய பிரபை, சிம்மம், அனுமார், கருட சேவை, சேஷ வாகனம், ஹம்ச வாகனம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் நான்கு ரத வீதிகளிலும் வெளிப்பிரகார வீதி உலா நடக்க உள்ளது. மே. 1 (திங்கள்) அன்று இரவு 7:00 மணிக்கு மேல் 8:00 மணிக்குள் திருக்கல்யாண உற்ஸவமும் மே. 4 (வியாழன்) அன்று காலை 10:30 மணிக்கு மேல் 50 அடி உயரம் கொண்ட பெரிய தேரில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க உற்சஸமூர்த்தி புறப்பாடுடன் தேரோட்டம் நடக்க உள்ளது. மே. 7 அன்று உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது. சீதா பிராட்டியார், ராமபிரான், லட்சுமணன், பரதன், சத்ருகனன், அனுமன் ஆகியோருக்கு விசேஷ திருமஞ்சனமும் சற்று முறை கோஷ்டி பாராயணமும் 10 நாட்களும் தொடர்ந்து நடக்கிறது. ஏற்பாடுகளை சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் விக்னேஸ்வரன் மற்றும் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !