உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாராந்திர பஜனை பெருமாள் கோவிலில் துவக்கம்

வாராந்திர பஜனை பெருமாள் கோவிலில் துவக்கம்

அன்னூர்: அன்னூர் பெருமாள் கோவிலில் வாராந்திர பஜனை துவக்க நிகழ்ச்சி நடந்தது.

அன்னூரில் 300 ஆண்டுகள் பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாத திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோவில் வளாகத்தில் வாராந்திர பஜனை துவக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது, திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று மாலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை பஜனை நடைபெறும், என ராமானுஜ பக்தர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !