உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவாலம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்: டி. கூடலூரில் குவிந்த பக்தர்கள்

பூவாலம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்: டி. கூடலூரில் குவிந்த பக்தர்கள்

குஜிலியம்பாறை: டி.கூடலூர்அருள்மிகு பூவாளம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

குஜிலியம்பாறை ஒன்றியம் டி.கூடலூரில் அருள்மிகு பூவாளம்மன் திருக்கோயில் உள்ளது. சுற்றுப்பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. கோவில் புனரமைக்கும் பணிகளை தொடர்ந்து, ஏப்., 21 ல் கரூர் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தமெடுத்தல், ஏப்., 22 ல் ஆனைக்கல் அய்யனிடம் ஸ்ரீ பூவாளம்மன் குடமுழுக்கு விழாவிற்கு அனுமதி பெற்று வருதல், விநாயகர் பூஜை, காயத்ரி மந்திர ஹோமங்கள், மகா தீபாராதனை நடந்தது. ஏப்., 23 ல் இரண்டாம் கால பூஜை, கோபுர கலசங்கள் அபிஷேகம், மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை, நான்காம் கால பூஜையை தொடர்ந்து, காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள், யாகசாலையில் இருந்து மந்திர நீர் கலசங்கள் ஆலயம் வலம் வந்து, ராஜகோபுரம் மூலஸ்தானம் பரிவார விமான கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். மூன்று கருடன்கள் வலம் வந்ததை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர். பிறகு கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் சிறப்பான அன்னதானம், தேங்காய், பழத்துடன் கூடிய மஞ்சள் பை வழங்கப்பட்டது. விழாவில், ஊர் பெரியவர் ராமமூர்த்தி ஐயர், ஊர் நாட்டாமை சிவபெருமாள், கோவில் தலைவர் பழனிச்சாமி, குஜிலியம்பாறை முன்னாள் சேர்மன் செல்வராஜ், எட்டுப்பட்டி ஊர் நாட்டாமைகள், மற்றும் எம்.பி., ஜோதிமணி, அமைச்சர் சக்கரபாணி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிச்சாமி, பரமசிவம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !