ஆதிசங்கரர் 2532வது ஜெயந்தி விழா: ராமேஸ்வரத்தில் யாக பூஜை
ADDED :943 days ago
ராமேஸ்வரம்: ஆதிசங்கரரின் 2532வது ஜெயந்தியொட்டி ராமேஸ்வரம் காஞ்சி மடத்தில் சிறப்பு பூஜை நடந்தது.
ஆதிசங்கரரின் 2532 வது ஜெயந்தி யொட்டி ராமேஸ்வரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் இன்று காலை புனித கங்கைநீர் கலசம் வைத்து காஞ்சி மடத்தின் மேலாளர் ஆடிட்டர் சுந்தரம், நிர்வாகி ஆனந்தபத்மநாப சர்மா மற்றும் புரோகிதர்கள் கிரம்ம அர்ச்சனை, ஆவஹத்தி பூஜை செய்தனர். இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பின் காஞ்சி மடத்தில் உள்ள ஆதிசங்கரர் மற்றும் சீஷ்யர்களின் சிலைகளுக்கு புரோகிதர்கள் மலர் தூவி பூஜை செய்து தீபாரனை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.