உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோவிலில் ஆதிசங்கராச்சாரியார் பிறந்தநாள் விழா

காளஹஸ்தி சிவன் கோவிலில் ஆதிசங்கராச்சாரியார் பிறந்தநாள் விழா

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் இன்று (25.4.2023) திங்கட்கிழமை ஆதிசங்கராச்சாரியார் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.  அதைவத சைவக் கோட்பாட்டை உலகுக்குப் பரப்பிய ஆதி சங்கராச்சாரியார் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள பிரம்மா கோயிலில் சங்கராச்சாரியார் சிலை நிறுவப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர்  அஞ்சூரு. சீனிவாசுலு, கோயில் அதிகாரி சாகர் பாபு ஆகியோர் தெரிவித்தனர்.

ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ பஞ்சமுகேஸ்வர பிரம்மா கோவிலில், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் பிறந்தநாள் விழா நடந்தது.  ஸ்ரீஆதிசங்கராச்சாரியாரின் திருவுருவப் படத்திற்கு கோயில் தலைமை அர்ச்சகர் கருணா குருக்கள், கோயில் வேத பண்டிதர்கள் அர்த்தகிரி ஆகியோர் சிறப்பு பூஜைகளை நடத்தி. வேத மந்திரங்களுடன் சிறப்பு ஆரத்தி எடுத்தனர். இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்ற தேவஸ்தான சேர்மன் அஞ்சூரு சீனிவாசலு, கோவில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு ஆகியோர் பேசுகையில் சைவ சித்தாந்தத்தை உலகளாவிய ரீதியில் பரப்பி, ஆன்மிகச் சிந்தனையை மகா மனித இனம் முழுமைக்கும் பரப்பி அவர்களை ஆன்மீக வழியில் நடக்கச் செய்த  மகான் அத்வைத தத்துவவாதி பூஜ்ய குருக்கள் ஸ்ரீஆதிசங்கராச்சாரியார் எனப் போற்றப்பட்டார்.  ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள பஞ்சமுகேஸ்வரர் கோவிலில் ஸ்ரீஆதிசங்கராச்சாரியார் சிலை நிறுவப்படும் என்றனர்.  இந்நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், மற்றும் கோவில் அதிகாரிகள் ஊழியர்கள்  கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !