உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவம் துவக்கம்

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவம் துவக்கம்

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயில்  பிரமோத்ஸவத்தை முன்னிட்டு கொடியற்றத்துடன் துவங்கியது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சித்திரை மாதத்தில் பிரமோத்ஸவம் 12 நாட்கள் நடைபெறும். நேற்று காலை7:45 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் கல்யாண மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து பூஜைகள் நடந்தன. பின்னர் கொடிமரம் திருவீதி வலம் வந்து, கொடிமரத்தினருகே எழுந்தருளல் நடந்தது. கொடிமரத்திற்கு பூஜை நடந்து காலை 11:05 மணிக்கு கொடியற்றம் நடந்தது. பின்னர் கொடிமரத்திற்கு அபிேஷகம் நடந்து அலங்காரத் தீபாராதனை நடந்தது. பின்னர் பெருமாளுக்கு பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. மாலையில் யாகசாலை பூஜைகள் துவங்கி ஹோமம் நிறைவுற்ற பின் சுவாமிக்கு காப்புக்கட்டி விழா துவங்கியது. சுவாமி பல்லக்கில் தீருவீதி வலம் வந்தார்.

ராமானுஜர் 1006 ம்பிறந்த நாள்: திருக்கோஷ்டியூரில் திருமந்திரம் உபதேசித்த ராமானுஜர் 1006 வது பிறந்த நாளை முன்னிட்டு மங்களாசாசனம் நடந்தது. நேற்று மதியம் 12.00 மணி அளவில் ராமானுஜர் சன்னதியிலிருந்து கல்யாண மண்டபத்தில் பெருமாள் முன்பு  எழுந்தருளினார். இருவருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து மங்களாசாசனம் நடந்து. பின்னர் மீண்டும் சன்னதி எழுந்தருளி நாலாயிர திவ்ய பிரபந்தம் சாத்துமுறை நடந்து கோஷ்டி விநியோகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !