காரணீஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி சேவை: பக்தர்கள் தரிசனம்
சென்னை: காரணீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா மூன்றாவது நாளான இன்று அதிகார நந்தி சேவையில் சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொண்டை மண்டலத்தில் முக்கிய சிவன் கோவில்களில் ஒன்றாக, சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில், இந்த ஆண்டிற்கான இவ்விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. விழாவில் நேற்று காலை சூரிய பிரபை அலங்காரத்தில் சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் மூன்றாம் நாளான இன்று காலை 6:00 மணிக்கு அதிகார நந்தி சேவை சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 29ல் வெள்ளி ரிஷப வாகன புறப்பாடும் நடக்கிறது. மே 1ல் தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 7:00 மணிக்கு பக்தர்களால் தேர் வடம்பிடிக்கப்படுகிறது. இரவு, சிறப்பு புஷ்ப அலங்காரங்களுடன், சுவாமி தேரிலிருந்து கோவிலுக்கு எழுந்தருள்கிறார். வரும் மே 4ல் திருக்கல்யாண உற்சவமும், அடுத்த நாள் புஷ்ப பல்லக்கு சேவையும் நடக்கிறது. அன்று இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.