அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம் : பொம்மை பூக்கொட்டும் நிகழ்ச்சி
ADDED :1261 days ago
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு பொம்மை பூக்கொட்டும் நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று இரவு மூன்றாம் பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய, உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையாருக்கு பொம்மை பூக்கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.