திருப்பதியில் வேத பூர்த்தி பரிக்ஷ சான்றிதழ் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்
திருப்பதி: திருப்பதியில் உள்ள மகாதி ஆடிட்டோரியத்தில் சங்கர ஜெயந்தி நாளான நேற்று (ஏப்ரல் 25ல்) வேத வித்யார்திகளுக்கு வேத பூர்த்தி பரிக்ஷ சான்றிதழ்களை பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் வழங்கினார்.
வேதத்தை வெவ்வேறு கிளைகளில் படிக்கும் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த வித்யார்த்திகள், வேத ரக்ஷனா நிதி அறக்கட்டளையால் ஸ்ரீமடத்தில் நடத்தப்பட்ட தேர்வுகளில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சங்கர ஜெயந்தி மற்றும் விஜயதசமி என இரண்டு முறை சான்றிதழ் வழங்கப்படுகிறது. நேற்று நடைபெற்ற விழாவில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அனுக்ரஹ பாஷணம் செய்து அருளினார். தொடர்ந்து, வேத வித்யார்த்திகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி ஆசிர்வதித்தார். அவர்களது குடும்பத்தினரும் பிரசாதம் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் திருப்பதி எம்எல்ஏ ஸ்ரீ பூமன கருணாகர் ரெட்டி (முன்னர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலின் பொறுப்பாளர் - எஸ்விபிசி), பேராசிரியர் டாக்டர் பிரபுல்லா குமார் மிஸ்ரா துணைத் தலைவர் உஜ்ஜைன் மகரிஷி சாந்திபனி ராஷ்ட்ரிய வேத வித்யா பிரதிஷ்டான், பேராசிரியர் ராணி சதாசிவ மூர்த்தி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், மற்றும் பேராசிரியர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.