அம்பகரத்துார் பத்ரகாளியம்மன் கோவிலில் சம்ஹார நினைவுப் பெருந்திருவிழா: பந்தக்கால் சுபமுகூர்த்தம்
காரைக்கால்,: காரைக்கால் அம்பகரத்துார் பத்ரகாளியம்மன் கோவிலில் சம்ஹார நினைவுப் பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று பந்தக்கால் சுபமுகூர்த்தம் நடந்தது.
காரைக்கால் மாவட்டம், அம்பகரத்துார் பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷா சம்ஹார நினைவுப் பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று பந்தக்கால் சுபமுகூர்த்தம் நடந்தது. முன்னதாக பந்தக்காலுக்கு பலவகையான திரவியங்களால் அபிஷேகம் ஆராதனை நடந்தது. பின்னர் சுபமுகூர்த்த கால் கோவிலை சுற்றி வந்து சிறப்பு பூஜை செய்து நடப்பட்டது. விழாவில் வரும் 1ம் தேதி ஸ்ரீமகா மாரியம்மனுக்கு பூச்சொரிதலும், 2ம் தேதி பத்ரகாளியம்மனுக்கு பூர்வாங்க அபிஷேகம் நடக்கிறது. மே.30ம் தேதி பத்ரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறத. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவல் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.