உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேர் திருவிழாவில் சூரிய சந்திர மண்டல காட்சி

அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேர் திருவிழாவில் சூரிய சந்திர மண்டல காட்சி

அவிநாசி: அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா இரண்டாம் நாளான நேற்று காலையில்,பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, ஆனந்த வள்ளி சமேத சந்திரசேகர பெருமான் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப விமான சப்பரத்தில்,எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து மாலை சூரிய சந்திர மண்டலக் காட்சிகளில், ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர பெருமான் விநாயகருடன் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.

தேர்த்திருவிழாவுக்கு திருமுருகநாதர் வருகை: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு, திருமுருகநாதர் வருகை நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இதையொட்டி, திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி, அணைப்புதுாரிலுள்ள ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளினார். அபிஷேகம், அலங்காரம் ஆகியவை திருமுருகநாத சாமிக்கு நடைபெற்றது. தொடர்ந்து அவிநாசி போஸ்ட் ஆபீஸ் வீதியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ஸ்ரீசந்திரசேகர சுவாமி, திருமுருகநாதரை எதிர்கொண்டு அழைக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஊமையஞ் செட்டியார் தண்ணீர் பந்தல் மண்டபத்தில் கட்டளைதாரர்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின், திருமுருகநாத சுவாமி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வருகை புரிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !